ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
Updated On :12 ஜூலை 2024, 9:27 am

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மீடியா துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Social Media Executive

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 40,000

தகுதி: Electronics Media, Multimedia, Visual Communication போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது எம்.எஸ்சி பட்டம் பெற்று சமூக வலைதள பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிஇ பட்டதாரிகள் குறைந்தது இரண்டு ஆண்டுகளும், எம்.எஸ்சி பட்டதாரிகள் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Graphic Designer

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 25,000 - 30,000

தகுதி: Electronics Media, Multimedia, Visual Communication, Advertising, Journalism போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ, பட்டப்படிப்புடன் டிப்ளமோ முடித்தவர்கள் 3 ஆண்டும், பட்டதாரிகள் 2 ஆண்டும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, CARCA-(First Floor), College of Engineering Guindy Campus, Anna University, Chennai - 25

இ-மெயில்: dircarca@annauniv.edu

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 16.7.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.