
நவரத்னா தகுதி பெற்ற, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்(என்எல்சி) நிறுவனத்தில் என்எல்சி முன்னாள் ஊழியர்களுக்கான எக்ஸிகியூட்டிவ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.02/2024
பதவி: Executive - Operations
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 1,00,000
பதவி: Executive Maintenance
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 1,00,000
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், இசிஇ, எலக்ட்ரிக்கல், இஇஇ,மெக்கானிக்கல், சிவில் போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கொதிகலன், விசையாழி, மின்சாரம் பராமரிப்பு பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவமுள்ள என்எல்சி முன்னாள் ஊழியர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 63 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.354. இதர அனைத்து பிரிவினரும் ரூ.854 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.5.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.