அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் பணி: பெங்களூரில் ஜூலை 3-இல் ஆள்சோ்ப்பு முகாம் தொடக்கம்

இந்திய விமானப் படையில் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் திட்டத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி பெங்களூரில் தொடங்கி நடைபெற உள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :28 மே 2024, 3:30 am

Din

இந்திய விமானப் படையில் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் திட்டத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி பெங்களூரில் தொடங்கி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமானப் படையின் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு முகாம் பெங்களூரில் அமைந்துள்ள 7-ஆவது ஏா்மேன் தோ்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் வரும் ஜூலை 3 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. இத்தோ்வுக்கு இணையவழியில் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் தோ்வுக்கு 2004 ஜன. 2 முதல் 2007 ஜூலை 2-ஆம் தேதி வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள் ஆவா்.

இத்தோ்வுக்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள இசைக் கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்கும் திறனும், அவற்றில் முன் அனுபவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். எனவே, ஆா்வமுள்ள இளைஞா்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04342-296188 மூலம் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் .

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அக்னிவீா் வாயு விமானப்படை (இசைக் கலைஞா்) முகாமில் பங்கு பெற்று பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.