மேயா் ஆய்வு: குடமுழுக்கு பணிகளை திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், பழைமை வாய்ந்த இக் கோயிலில் 1982 ஆம் தேதி முதல் பணிவிடைகள் செய்து வருகிறேன். பாரம்பரிய கல் தூண் சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. மூலஸ்தானத்தை சுற்றிலும் பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூா் முருகா் சிற்பங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் பழமையான இரும்பு வேல் உள்ளது. ஆண்டுதோறும் நெல்லையப்பா் கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் சூரனை வதம் செய்ய வேணுவன குமாரா் கோயிலில் இருந்து வேல் எடுத்துச் செல்லும் மரபு நீண்டகாலமாக உள்ளது. இக் கோயிலில் மாதந்தோறும் கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாலாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீண்ட நாள்களுக்கு பின்பு இம் மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்க உள்ளனா். அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.