சுங்க வரித்துறையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சுங்க வரி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுங்க வரித்துறையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
Published on
Updated on
1 min read

சுங்க வரி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் . I/(22)/OTH/1330/2024-P&E(M) R&I

பணி: Seaman

காலியிடங்கள்: 33

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் mechanised vessel பிரிவில் 3 ஆண்டுகள் அல்லது Helmsman, Seaman பணிகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Greaser

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கான வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஇடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சுக முகவரியுடன் முத்திரையிடப்படாத 2 அஞ்சல் கவரை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் கவர் மீது "Application for Marine Wing Post - Customs Preventive Commissionerate, Mumbai மற்றும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Commissioner of Customs, P&E(Marine), 11th Floor, New Customs House, Ballard Estate, Mumbai - 400 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 17.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com