விருதுநகர் மாவட்ட நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள ஒப்பந்த அடிப்படையிலான 8 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியவும், எம்எஸ் ஆபீஸ் தெரிருக்க வேண்டும். மகளிர் குழுக்களில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பொறுப்பாளராக அல்லது இரண்டு ஆண்டு உறுப்பினராக இருத்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்போர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும் 5 ஆம் தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.