
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பணி: Sailors (SSR Medical) 02.2025/26 பிரிவு
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100
தகுதி : கணிதம். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் 2 இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 1.9.2024-க்கும் 29.2.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: இந்திய கடற்படையால் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் INET (Indian Navy Entrance Test) மற்றும் உடற்தகுதி. உடற்திறன் தேர்வுகள், மருத்துவத் தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
உயரம் : குறைந்தபட்சம் 157 செ.மீ. இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு: 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 Squats, 15 Pushups, 15 Sit ups எடுக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு பாடங்களிலிருந்து கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மே மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். இது குறித்து விபரம் அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் இதர தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒடிசா மாநிலத்திலுள்ள கடற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.60 மட்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.4.2025