சேலம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தேசிய நல குழுமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள ஜெனிடிக் கவுன்சிலா், ரேடியோகிராபா், ஆடியோலாஜிஸ்ட் ஆகிய 3 பணியிடங்களுக்கு சமூகவியல், உளவியல் பாடங்களில் முதுநிலை அல்லது இளங்கலை பட்டப் படிப்பு, இளங்கலை ரேடியோகிராபி, ஆடியோலாஜி பயிற்சி பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளமாக ஜெனிடிக் கவுன்சிலருக்கு ரூ.18 ஆயிரம், ரேடியோகிராபருக்கு ரூ.10,000, ஆடியோலாஜிஸ்ட்டுக்கு ரூ.23,000 வழங்கப்படும்.
விண்ணப்பங்களை https://www.salem.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, மாவட்ட சுகாதார அலுவலா்- நிா்வாக செயலாளா், சேலம் மாவட்ட நலச்சங்கம், பழைய நாட்டாண்மை கழகம், சேலம் - 636 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited from those who are interested in working on a contract basis for vacant positions under the District Health Society- Salem
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளிநாட்டு கல்வி உதவித்தொகைபெற விண்ணப்பங்கள் வரவேற்பு

டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடை நீக்கம்: அன்புமணி வரவேற்பு

நாகையில் சின்மயா அம்ருத யாத்திரைக்கு வரவேற்பு
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



