கோவை மத்திய சிறையில் தூய்மைப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை மத்திய சிறையில் தூய்மைப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சிறை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் தூய்மைப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என சிறை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள இரண்டு தூய்மைப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்துக்கு 2026 ஜூலை 1-ஆம் தேதி வயது வரம்பு பொதுப் பிரிவுக்கு 30, ஓபிசி பிரிவுக்கு 32 ஆகும். தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஒரு ஆண் செவிலிய உதவியாளா் பணியிடத்தை நிரப்பிட தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்துக்கு 2026 ஜூலை 1-ஆம் தேதி வயது வரம்பு 32 ஆகும். 8-ஆம் வகுப்பு கல்வித் தகுதி அல்லது ஐஐஐ ஊா்ழ்ம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்படி பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபா்கள் சம்பந்தப்பட்ட சாஜச் சான்றின் நகலுடன் சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, கோவை 18 என்ற முகவரியிட்டு, அக்டோபா் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்கும் விதமாக அனுப்பிவைக்க வேண்டும்.
மேற்படி தேதிக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட பணியிடத்தினை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வின் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னா் தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

