கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
Published on

கேரளம் மாநிலம், உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். UCSL/IMS/HR/VN/F/11-ReN/2/OA/2025/33

பணி: Office Assistant

காலியிடங்கள்: 8

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ. 25,000, இரண்டாம் ஆண்டு ரூ. 25.510, மூன்றாம் ஆண்டு ரூ. 26,040, நான்காம் ஆண்டு ரூ. 26.590, ஐந்தாம் ஆண்டு ரூ. 27,.150

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். அதாவது 18.3. 1995-க்கு பின்னர் பிறந்த வராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in அல்லது www.udupicsl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.3.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com