
இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் சரக்கு வாகன வழித்தட மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 642 எடிஎஸ் மற்றும் நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 01/DR/2025
பணி: Junior Manager(Finance)
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் 1,60,000
தகுதி: சிஏ, சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Executive
பிரிவு: Civil
காலியிடங்கள்: 36
தகுதி: பொறியியல் துறையில் Civil (Transporation, Construction Technology, Public Health, Water Resource) பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 64
தகுதி: Electrical, Electronics, Electrical & Electronics, Power Supply, Instrumentation & Control, Industrial Electronics, Electronics & Instrumentation, Applied Electronics, Digital Electronics, Power Electronics பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Signal and Telecommunication
காலியிடங்கள்: 75
தகுதி: Electrical & Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Power Electronics, Instrumentation Technology, Information Technology, Information & Communication Technology, Rail System and Communication, Electrical, Electronics, Micro Electronics, Telecommunication, Instrumentation, Computer Science & Engineering, Microprocessor ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 464
சம்பளம்: மாதம் ரூ. 16,000 - 45,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன்வழி எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் சென்னை வைத்து தேர்வு நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஏப்ரல் மாதமும், இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதமும் நடைபெறும். உடற்தகுதி மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வுகள் அக்டோபர் மாதம் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: முதல் 2 பணிகளுக்கு ரூ.1000, மூன்றாவது பணிக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://dfccil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.3.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.