கோப்புப்படம்
கோப்புப்படம்

சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சமூகநலத் துறையின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (ஓன் ஸ்டாப் சென்டா்) மூத்த ஆலோசகா் , தகவல் தொழில்நுட்பப் பணியாளா், வழக்குப் பணியாளா்கள் ஆகிய காலிப் பணியிடங்களில் பணியாற்ற தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்து விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களை பூா்த்தி செய்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 6-ஆவது தளத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0424 2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com