மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கவரி ஆணையர் அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து ஏப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Tradesman
காலியிடங்கள்: 2
வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic, Diesel, Fitter, Tumer, Welder, Electrician, Instrumentation, Carpentary டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Seaman
காலியிடங்கள்: 6
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவமும், Sea going mechanized vessel-இல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Greaser
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 -56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நீச்சல் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://chennaicustoms. gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட 4 புகைப்படம் மற்றும் இரண்டு சுய முகவரியிட்ட தபால் கவர் இணைத்து விரைவுத் தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் பணியின் பெயரை தபால் கவரின் மேல் பெரிய எழுத்தில் குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Additional Commis-sioner of Customs (Establis-hment), Office of the Commis-sioner of Customs (General), 2nd Floor, Krishna Block, Rajaji Salai, Chennai - 600 001.
இ-மெயில்: cuschn-estt@gov.in
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.4.2026
மேலும் விண்ணப்பிப்போரின் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Recruitment of Marine Wing Under Direct Recruitment Quota in Greaser, Seaman and Tradesman (Group “C” Cadres) in the Departmental Marine Wing Functioning in Preventive Commissionerate., Chennai Customs House
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயில்வேயில் உதவி மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2ஆம் கட்டப் பயிற்சி வகுப்பு

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



