இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் என்பது மேற்குவங்கத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு நிறுவனம். இந்த நிறுவனம் இந்திய ரயில்வேக்காக மின்சார ரயில் இன்ஜின்களைத் தயாரித்து கொடுக்கிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய ரயில் இன்ஜின் தயாரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: GMA/Rectt & MPP/Sports Quota/2026 - 27
பணி: Sports Person (Sports Quota 26 - 27)
காலியிடங்கள்: 25
வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200 (கூடுதல் தகுதி பெற்றிருப்பவர்களுக்கு கிரேடு பே கூடுதலாக வழங்கப்படும்).
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட கல்வித்தகுதியுடன் காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டுத் தகுதிகள் குறித்த கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 1.4.2024 விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக விளையாட்டுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரயில்வேயில் கிளார்க் ஆக பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.250. கட்டணத்தை "PFA, chittaranjan Locomotive Works, Chittaranjan" என்ற முகவரிக்கு ஐபிஓ -ஆக எடுத்து அனுப்பவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.clw.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Personnel Officer, Administrative Building, Chittaranjan Locomotive Works, PO-Chittaranjan, District Paschim Bardhaman, West Bengal, PIN: 713 331.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 20.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
CLW Notification for recruitment through Sports Quota against Employment Notice
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்கக் கோரிக்கை
நீறுபூத்த நெருப்பு!

வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை வேண்டுமா? -உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!
விடியோக்கள்



