மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் காலியாக உள்ள தீயணைப்பு அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தில், மங்களூரு நகருக்கு வடக்கே அழகான மலைப்பகுதியில் அதிநவீன மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் அமைந்துள்ளது.
இங்கு பாலிப்ரோப்பிலீன்பிரிவு மற்றும் பாரா-சைலீன் மற்றும் பென்சீன் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அரோமேட்டிக் காம்ப்ளக்ஸ் ஆகியவையும் உள்ளன.
இந்த நிறுவனத்தில் தற்போது பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தீயணைப்பு அதிகாரி பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி, வயது வரம்பு, பிற தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை பார்ப்போம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: MRPL/PFTE/2026/01
பணி: Fire Officer
காலியிடங்கள்: 5
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.13 லட்சம்
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் தீ, தீ மற்றும் பாதுகாப்பு(Fire,Fire & Safety)பிரிவில் இளநிலைப் பட்டம், 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் எஸ்சி, எஸ்டி C பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.mrpl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
The selection process consists of Personal Interview only. However, MRPL reserves the right to raise the minimum eligibility standards/ criteria in case the number of candidates eligible for Personal Interview is more than the specified ratio...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










