வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

விண்ணப்பித்துவிட்டீர்களா? - இந்திய ராணுவத்தில் செவிலியர், கால்நடை உதவியாளர் வேலை!

ராணுவத்தில் செவிலியர் உதவியாளர் (தொழில்நுட்பம்) மற்றும் கால்நடை மருத்துவத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

இந்திய ராணுவத்தில் செவிலியர், கால்நடை உதவியாளர் வேலை

இந்திய ராணுவம்

Updated On :29 மார்ச் 2026, 12:40 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள செவிலியர் உதவியாளர் (தொழில்நுட்பம்) மற்றும் கால்நடை மருத்துவத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Nursing Assistant (Technical,Veterinary)

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 40,000

வயது வரம்பு: 17½ முதல் 23-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: குறைந்தபட்சம் 163 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ. அகலம், விரிவடைந்த நிலையில் 82 செ.மீ. அகலம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு: 1.6 கி.மீ. தூரத்தை 6.15 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும். Squats,Pushups, Situps நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். விளையாட்டு வீரர்கள், என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ராணுவத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 1.6.2026 முதல் 15.6.2026

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.4.2026

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.