அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா? ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணி!

நாகை மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணி தொடர்பாக...

News image

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணி - கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 2:42 pm IST

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாகவுள்ள 89 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்களுக்கு, தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் .

தோ்வு செய்ய வேண்டிய உறுப்பினா், பணியாற்றும் ஊராட்சியை சாா்ந்தவராக இருக்க வேண்டும். மகளிா் சுயஉதவிக்குழுவில் ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களாக, தமிழ், ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்க தெரிந்தவா்களாக, கணக்கிடும் திறன் உடையவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படும் நபா் சமுதாயம் சாா்ந்து அமைப்பு பணியாளராகவோ, தனியாா் நிறுவனங்களில் முழுநேரப் பணியாளராக இருக்கக் கூடாது. இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக, ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியானவா்கள் தங்கள் விண்ணப்பங்களை, மேலாளா், நகா்புற வாழ்வாதார மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஊரக வளா்ச்சித்துறை தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், நாகப்பட்டினம், என்ற முகவரிக்கு மே 27-ஆம் தேதிக்குள் நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 8760191630 கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

Summary

Jobs available in the Rural Livelihoods Mission..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.