தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அவசரகால மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் செவிலியா் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து....

Applications invited for nursing positions at the emergency maternity and neonatal care unit

செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்

Updated On :

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களில் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையத்தில் (CEmONC) ஒப்பந்த அடிப்படையிலான செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்தப்பணி முற்றிலும் தற்காலிமானது, எக்காரணம் கொண்டும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21,000 சம்பளமாக அளிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிப்போர் செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்(பி.எஸ்சி நர்சிங்) அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணியிடத்திற்கான அறிவிப்பு, விண்ணப்பப்படிவம் மற்றும் அரசு ஆணை ஆகியவற்றை சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in என்ற வலைத்தளத்தின் வேலைவாய்ப்பு பிரிவில் கொடுக்கப்பட்டுள்ல விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் செயலாளா், மாவட்ட நலவாழ்வுச்சங்கம், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மைகல்வி அலுவலகம் மேல்தளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், சிவகங்கை- 630 562 -என்ற முகவரிக்கு வரும் 4.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம்.

விண்ணப்பிப்போரின் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications invited for nursing positions at the emergency maternity and neonatal care unit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.