விண்ணப்பித்துவிட்டீர்களா..? குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!
குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பது குறித்து...

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் - கோப்புப்படம்
தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் குழந்தைள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:
பணி: Support Persons
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: சமூகப் பணி, சமூகவியல், சட்டம், உளவியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ, தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
District Child Protection Officer, District Child Protection Unit, Room No: F0-06, Ground Floor, F-Block, New District Collectorate Campus, Chengalpattu - 603 111.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.10.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications are invited for the post of “EMPANELMENT AS SUPPORT PERSON” under District Child Protection Unit – Chengalpattu District
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


