சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள! 5 முக்கிய பழக்கங்கள்
சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள 5 முக்கிய பழக்கங்கள்

சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக ஒரு விழிப்புணர்வு என்பது ஒரு நாளில் நடைபெறும். ஆனால் ஒரு மாதம் முழுக்க இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் அதன் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
சில சின்ன சின்ன பழக்கங்கள், பெரிய மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும். அவற்றை சரியாக கடைப்பிடித்தால் நிச்சயம் மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம்.
1. ஆச்சரிய பரிசுகள் என்று வரும் குறுஞ்செய்திகள்
உங்களுக்கு ஆச்சரிய பரிசுகள் விழுந்திருக்கின்றன என்று ஒரு குறுஞ்செய்தி வந்தவுடன் ஆவலோடு அதனைத் திறந்து பார்க்கக் கூடாது.
அதற்கு முன்பு நன்கு சிந்தியுங்கள். இது பற்றி நாம் எங்கேயாவது கேள்வி பட்டிருக்கிறோமா என்று? நிச்சயம் சைபர் மோசடி குறித்த விழிப்புணர்வு தகவலில் இது பற்றி கூறப்பட்டிருக்கும் என்பது நினைவுக்கு வரும்
பிறகென்ன திறந்து பார்க்காமல் டெலீட் செய்வது உத்தமம்.
ஒரே பாஸ்வேர்டுதன் என பெருமை பேச வேண்டாம்
ஒவ்வொரு அக்கவுண்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்ட் பயன்படுத்தவும். அல்லது எனக்கு மறந்துவிடும், ஒரே பாஸ்வேர்டுதான் என அனைத்துக்கும் பயன்படுத்துவதைப் பற்றி பெருமையாக பேசுவதையாவது தவிர்த்துக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்குகளுக்கு இரட்டைப் பாதுகாப்பு
நிச்சயமாக வங்கிக் கணக்கு போன்றவற்றுக்கு இரட்டைப் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துங்கள். செல்போனுக்கு ஓடிபி வந்தால்தான் திறக்கும் வசதி இருக்கிறது. அதனை ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அப்டேட்-ஆக இருங்கள்
செல்போன் மற்றும் கணினிகளை பாதுகாப்பு அம்சத்தின் அப்டேட்களை அவ்வப்போது செய்து கொள்ளுங்கள். அவற்றில் எந்த சமரசமும் வேண்டாம்.
சமூக வலைத்தளங்களில் கவனம்
சில சமூக வலைத்தளங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் செயலிகளாகவும் இருக்கும். இருப்பிடம், தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் அவை பயன்படுத்தும். இதுபோன்றவற்றை செட்டிங்கில் போய் தடை செய்யுங்கள்.
Summary
5 Key Habits to Protect Yourself from Cybercrimes!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

