பயங்கரவாதத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை அமெரிக்கா மதிக்க வேண்டும்: ஆன்டனி பிளிங்கன்
பயங்கரவாதத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை அமெரிக்கா மதிக்க வேண்டும்...

ஆன்டனி பிளிங்கன்
பயங்கரவாதத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை அமெரிக்கா மதிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில், அவா் சனிக்கிழமை கூறியதாவது:
உலக அரங்கில் இந்தியா மிக முக்கிய சக்தியாக விளங்குகிறது. அமெரிக்கா-இந்தியா இடையிலான நட்புறவும், இரு நாடுகளின் பொதுவான நலன்களும் உலகளாவிய முக்கியத்துவம் கொண்டவை.
ஆனால் பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் உறவு பிராந்திய அளவிலான உறவாகும். பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் போன்ற முக்கிய விஷயங்களில், பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட வேண்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவு அடிப்படையில் முற்றிலும் மாறுபட்டவை.
பயங்கரவாதத்தை எந்தச் சூழலிலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற கொள்கை இருக்க வேண்டும். இதன் மூலம், பயங்கரவாதத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை அமெரிக்கா மதிக்க வேண்டும்.
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வேண்டும். அதே நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் அதிகரிக்காமல் இருக்க, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.
ரஷியா-இந்தியா உறவு முறிய விரும்பவில்லை: ரஷியாவுடனான இந்தியாவின் நட்புறவுக்கு நீண்ட கால வரலாறு உள்ளது என்பதை அமெரிக்கா புரிந்து வைத்துள்ளது. சில விஷயங்களில் நமது கண்ணோட்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ரஷியா-இந்தியா இடையிலான உறவு முடிவுக்கு வர வேண்டும் என அமெரிக்கா விரும்பவில்லை என்று தெரிவித்தாா்.
Summary
The US must respect India's right to defend itself against terrorism: Antony Blinken
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

