
ரயில்வேயில் குரூப் 'சி', 'டி' பணிகள்: சாரண-சாரணியர் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தென்கிழக்கு ரயில்வேயில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான சாரண மற்றும் சாரணியர் ஒதுக்கீட்டின் கீழ், நிலை-2 , குரூப் 'சி'பிரிவில் இரண்டு பணியிடங்களையும் மற்றும் நிலை-1, குரூப் 'டி' பிரிவி

தென்கிழக்கு ரயில்வேயில் குரூப் 'சி', 'டி' பணிகள் - இந்தியன் ரயில்வே
தென்கிழக்கு ரயில்வேயில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான சாரண மற்றும் சாரணியர் ஒதுக்கீட்டின் கீழ், நிலை-2 , குரூப் 'சி'பிரிவில் இரண்டு பணியிடங்களையும் மற்றும் நிலை-1, குரூப் 'டி' பிரிவில் எட்டு பணியிடங்களையும் நிரப்புவதற்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட 'சாரண மற்றும் சாரணியர்' தகுதியைக் கொண்டிராத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.
இது குறித்த விவரம் வருமாறு...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: RRC/SER/S&G Quota/2026-27
பணி: Clerk cum - Typist (Scouts & Guides Quota Recruitment - 2026-27)
காலியிடங்கள்: 10
சம்பளம்: 7 வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுன் சாரண மற்றும் சாரணியர் அமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய, மாநில அளவில் நடைபெற்ற சாரண சாரணியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.1.2027 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு தலா 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்பப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சாரண மற்றும் சாரணியர் அமைப்பில் விண்ணப்பதாரரின் அனுபவம்,சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணியில் சேர்ந்த 2 ஆண்டிற்குள் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது,OBC பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர்களுக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcser.co.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்த நகல்களை இணைத்து விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.10.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Online Applications are invited from eligible candidates as per criteria given below for filling up the vacancies against the Scouts & Guides Quota of South Eastern Railway for the year 2026-2027
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







