
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்கள் குறித்து...

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் - NEERI
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாட்டின் முதன்மையான பன்முகத்தன்மை கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-ன் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமானது, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் தன்னாட்சி அமைப்பான 'அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின்' ஒரு அங்கமாகத் திகழும் ஆய்வகமாகும்.
இந்த நிறுவனம், மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரை தலைமை இடமாகவும், தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து இடங்களில் மண்டல மையங்களையும் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Officer
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.86,580
வயதுவரம்பு: 15.10.2026 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.69,480
வயதுவரம்பு: 15.10.2026 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.neeri.res.in அல்லது http://career.neeri.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 15.10.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Advertisement No- CSIR-NEERI/1/2026 for recruitment for the posts of Technical Assistant and Technical Officer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







