நியாய விலைக்கடையில் விற்பனையாளர் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் பணிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நியாய விலைக்கடையில் விற்பனையாளர் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் பணிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நியாய விலைக்கடை விற்பனையாளர்

மொத்த காலியிடங்கள்: 245

சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பின்னர் ஊதிய விகிதம் ரூ.8,600 - 29,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மொழித் திறன்: இந்த வெளியான நாளன்று விண்ணப்பத்தாரர் தமிழ் மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள  வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:  அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் www.drbcud.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.drbcud.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com