தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்படும் மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் காலியாக உள்ள 418 அமலாக்க அதிகாரி, 159 உதவி நிதி ஆணையர் என 577 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை
இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்
இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்படும் மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில்(இபிஎஃப்ஓ) காலியாக உள்ள 418 அமலாக்க அதிகாரி, 159 உதவி நிதி ஆணையர் என 577 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Enforcement Officer/Accounts Officer
காலியிடங்கள்: 418(SC-57,ST-28,OBC-78,EWS-51,UR-204)
சம்பளம்: 7-ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Provident Fund Commissioner
காலியிடங்கள்: 159 (SC-25,ST-12,OBC-38,EWS-16,UR-68)
சம்பளம்: 7- ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.company Law, Labour Law, public Administration பாடங்களில் டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை எஸ்பிஐ வங்கி ஆன்லைன் மூலம் செலுத்தவும். எ,்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.03.2023.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com