வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எம்எஸ்டிசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மின ரத்னா நிறுவனமான எம்எஸ்டிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எம்எஸ்டிசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


மத்திய இரும்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் மின ரத்னா நிறுவனமான எம்எஸ்டிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளம் தொழில் வல்லுநர்கள், சந்தையியல், வணிக மேம்பாடு, நிதி மற்றும் கணக்கு, பணியாளர்கள் மற்றும் நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: OSD(Operation)-Freshers
காலியிடங்கள்:26
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: ஏதாவொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எம்.பி.ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: OSD (Operations)-Ecommerce
காலியிடங்கள்:1
சம்பளம்: மாதம் ரூ.60,000

பணி: OSD (Operations)-Vigilance
காலியிடங்கள்:1
சம்பளம்: மாதம் ரூ.50,000
பணி: OSD (Operations)-RO/BO
காலியிடங்கள்:4
சம்பளம்: மாதம் ரூ.50,000

பணி: OSD (Human Resources)
காலியிடங்கள்:4
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி:  60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: OSD (Facility and Estate Management)
காலியிடங்கள்:1
சம்பளம்: மாதம் ரூ.60,000
தகுதி: இளநிலை பட்டப்படிப்பு /டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: OSD (Finance)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.70,000

பணி: OSD (Finance) 
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.60,000

தகுதி: CA, ICWA பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எம்பிஏ (நிதி), நிதியியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ தேர்ச்சியுடன்  2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வுக் கட்டணம்:  ரூ. 500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.mstcindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com