விண்ணப்பித்துவிட்டீர்களா..? எச்சிஎல் நிறுவனத்தில் வேலை!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? எச்சிஎல் நிறுவனத்தில் வேலை!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். HCL/KCC/HR/Rectt/22/01

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Mining Mate
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.18,480 - 45,400

பணி: Blaster
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.18.180 - 37,310

பணி: WED 'B'
காலியிடங்கள்:  9
சம்பளம்: மாதம் ரூ.18.180 - 37,310

பணி: WED 'C' 
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.18.080 - 35,960

வயதுவரம்பு: 1.12.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைககள்  வழங்கப்படும். 

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com