ரூ.65,500 சம்பளத்தில் மனித உரிமைகள் ஆணையத்தில் வேலை வேண்டுமா?
By DIN | Published On : 19th January 2023 12:07 PM | Last Updated : 19th January 2023 12:07 PM | அ+அ அ- |

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் காலியிடங்கள் தட்டச்சர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 1/2021 தேதி: 23.12.2022
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இதில் ஏதாவதொன்றில் இளநிலை, முதுநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும்.
பணி: தட்டச்சர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
பணி: இரவு காவலர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.shrc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்று செய்து அதனுடன் பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையும் சேர்த்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயலாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு. எண்.143. பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை(கிரீன்வேஸ் சாலை) சென்னை - 600 028
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.1.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...