சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க நாளை கடைசி!

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர், செவிலியர் போன்ற காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க நாளை கடைசி!
Published on
Updated on
1 min read



சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர், செவிலியர் போன்ற காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Medical Officer
காலியிடங்கள்: 140
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Staff Nurse
காலியிடங்கள்: 140
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: ஜிஎன்எம் பிரிவில் டிப்ளமோ, பி.எஸ்சி., (செவிலியர்) முடித்து தமிழ்நாடு மருத்துவச்சி கவுன்சில் மற்றும் செவிலியர்கள் பிரிவில் பதிவு செய்திருக்க வேண்டும். 

பணி: MPHW / MultiPurpose Health Worker (Health Inspector - Grade II) - Male
காலியிடங்கள்: 140
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Support Staff
காலியிடங்கள்: 140
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,500
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமோ நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள்(மார்ச் 7) விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, 3rd Floor, Amma Maligai, Rippon Buildings, Chennai – 3”

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com