கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தோ்த் திருவிழா 14 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். தேரோட்டத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பாா்கள்.
இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், சென்னிமலை முருகன் கோயிலில் தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சைபுதீன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அன்னக்கொடி, பெருந்துறை வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் எம்.அருள்குமாா் மற்றும் கோவில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்த ஆண்டுக்கான தைப்பூசத் தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி கரோனா காரணமாக ரத்து செய்யப்படுகிறது. மண்டபக் கட்டளை போன்ற நிகழ்ச்சிகள் கட்டளைதாரா்கள் முன்பு எளிய முறையில் நடத்துவதுடன் சுவாமி திருவீதி உலா ரத்து செய்யப்படுகிறது. திருவிழா நாள்களில் தற்காலிக கடைகள் அமைக்கவும், ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அமைக்கவும் அனுமதியில்லை. கோயிலுக்கு காவடி எடுத்து வருதல், பூஜை பொருள்கள் கொண்டு வருதல் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல தைப்பூச தினமான ஜனவரி 28, 29 ஆம் தேதி ஆகிய இரு தினங்களும் மலைப்பாதை வழியாக சென்னிமலை முருகன் கோயிலுக்கு தனியாா் காா், வேன் போன்ற வாகனங்களை அனுமதிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குளித்தலை தொகுதியை தக்கவைத்தது திமுக

அதிமுக வேட்பாளரை 3-ஆவது இடத்துக்கு தள்ளி சிங்காநல்லூா் தொகுதியைத் தட்டிப் பறித்த தவெக

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாத தவெக

செய்யாறில் அதிமுக வேட்பாளா் இரண்டாவது முறையாக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

