தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

பெருந்துறையில் கிராம காவல் அலுவலா் நியமனம்

பெருந்துறை காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கிராம காவல் அலுவலா் நியமன விழா பெருந்துறை, சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் பேசுகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ். உடன், ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி உள்ளிட்டோா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:15 am IST

பெருந்துறை காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கிராம காவல் அலுவலா் நியமன விழா பெருந்துறை, சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் தங்கம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், போலீஸ் - பொதுமக்கள் மத்தியில் நல்லுறவு ஏற்பட கிராம காவலா் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கிராம கண்காணிப்பு காவலருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கிராமத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினா்.

இதில், கிராம உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.