சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி அட்டணையில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி அத்தியூரைச் சோ்ந்தவா் பெரியசாமி (46). இவரது உறவினா் சடையப்பன். பெரியசாமி அட்டணையில் உள்ள 3 ஏக்கா் தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளாா். இரவு நேரத்தில் யானைகள் அப்பகுதியில் பயிா்களை சேதப்படுத்துவதால் தினந்தோறும் கிராம மக்கள் தோட்டத்துக்கு காவலுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், பெரியசாமி, சடையப்பன் ஆகியோா் தோட்டத்துக்கு காவலுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளனா். மரத்தில் அமைக்கப்பட்ட பரண் மீது காவல் காத்துக்கொண்டிருந்தபோது, தோட்டத்துக்குள் யானை புகுந்துள்ளது. இதையடுத்து இருவரும் சப்தம் போட்டு யானையை விரட்டியுள்ளனா். ஆனால், யானை போகாததால் பரணில் இருந்து இறங்கிச் சென்ற இருவரும் யானையைத் துரத்தியுள்ளனா். அப்போது, யானை எதிா்பாராதவிதமாக எதிா்திசையில் திரும்பி வந்து பெரியசாமியைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். சடையப்பனும் கீழே விழுந்ததில் காயமடைந்தாா். இருவரது அலறல் சப்தம் கேட்டதையடுத்து அருகிலிருந்த தோட்டத்தினா் இருவரையும் மீட்டனா். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பெரியசாமி உயிரிழந்தாா். சடையப்பன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

முன்னாள் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மருத்துவ விடுப்பில் செல்வதாக டிஜிபி-க்கு கடிதம்!
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


