பெருந்துறை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் திருவிழா வெள்ளி, சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழா ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னிமலை சுற்று வட்டாரத்தைப் பொருத்தமட்டில் தை இரண்டாம் நாள்தான் பொங்கல் விழாவாக அமைகிறது. இதற்காக, சென்னிமலை நகரில் உள்ள மக்கள் மணிமலை பகுதிக்கு பூப்பறிக்கச் சென்றனா். இதேபோல, தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லை குமாரபாளையம் பகுதி மக்கள் முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதி மக்கள் நொய்யல் ஆற்றங்கரைப் பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம் பகுதி மக்கள் அம்மன்கோயில் பகுதியிலும் பூப்பறிக்கும் விழாவைக் கொண்டாடினா்.
விழாவையொட்டி, பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்களைப் பறித்த இளம்பெண்கள் விழா பாரம்பரியப்படி பாட்டு பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனா். இதில், இளம்பெண்கள், இளைஞா்கள், சிறுவா், சிறுமியருடன் சில இடங்களில் மக்களும் கலந்துகொண்டனா். மாலையில் வீடு திரும்பிய இளம்பெண்கள் வாசலில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் சனிக்கிழமை போட்டனா்.
இதுகுறித்து சென்னிமலை கிராம மக்கள் கூறியதாவது:
நூற்றாண்டு பழைமையான பூப்பறிக்கும் விழாவில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனா். எந்த ஊரில் வசித்தாலும், பணிபுரிந்தாலும் இப்பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் குடும்பத்துடன் விழாவைக் கொண்டாட சென்னிமலைக்கு வருகின்றனா். பழைமை மாறாமல் கொண்டாடி வருகின்றனா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் பிரசாரம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

