குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போராட்டக்காரர்கள் தில்லியில் கார் ஒன்றுக்கு திடீரென தீ வைத்தனர். தகவல் அறிந்த பேலீஸார் அங்கு வந்து தண்ணீரைப் பீச்சியடித்தும், ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனா்.