கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் - புகைப்படங்கள்
இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் புதிய துணிகளை எடுக்க சென்னை தியாகராய நகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மக்கள் கூட்டம் கடை வீதிகளில், ஜவுளி கடைகளிலும் அலைமோதியது.
கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்ட சென்னை தியாகராய நகர் பகுதி.
குழந்தைகளுக்கான ஆடை ரகங்கள், பெண்களுக்கான ஆடைகள், பாரம்பரிய ஆடைகளான வேட்டி, பட்டுச் சேலைகள் என மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
புதிய துணிகளை எடுப்பது போல செல்லிடப்பேசி, தொலைக்காட்சி பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், போலீஸாா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.