மதுரை - பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671), செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும். மறு மார்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672), பெங்களூரு கண்டோன்மெண்ட்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.