வானியல் அபூர்வமான முழு சந்திர கிரகணம் இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய நிலையில், அழகிய அடர் சிவப்பு நிறத்தில் காணப்பட்ட முழு சந்திரனை காண மக்கள் உற்சாகத்துடன் திரண்டனர்.ANI
பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு சரியாக நேற்றிரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது.
முழு சந்திர கிரகணத்தின்போது நிலா அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும்.ANI
இந்திய நேரப்படி இரவு 9:57 முதல் 1:27 மணி வரை கிரகணம் தெரிந்தது.Atul Yadav
முழு சந்திர கிரகணத்தை நள்ளிரவு 11:42 முதல் 12:33 மணி வரை காண முடிந்தது.
கிட்டத்தட்ட 85 நிமிஷங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. ANI
வானியல் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த முழு சந்திர கிரகணம்.R Senthilkumar
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழ்ந்தது.
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் தோன்றிய சந்திர கிரகணம், கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. VISHAL BHATNAGAR
ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லான்டிக், ஆர்டிக் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இதை பார்க்க முடிந்தது.VISHAL BHATNAGAR
சிறப்பு முகாம்களில் தொலைநோக்கிகள் மற்றும் நவீன வானியல் கருவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, அறிவியலாளர்கள் நேரடியாக விளக்கங்களையும் அளித்தனர்.
இதேபோன்ற சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அண்ணா அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.