வரலாற்று சிறப்புமிக்க இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளன்று இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது. 56 வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்.