பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி - புகைப்படங்கள்
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.ANI
பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றதன்மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.
பாா்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.ANI
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது வெற்றி ரன்களை அடித்த பிறகு கொண்டாடும் ஆஸ்திரேலியாவின் பியூ வெப்ஸ்டர்.
2ஆவது இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.ANI
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 157/10 ரன்களை எடுத்தது.ANI
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பியூ வெப்ஸ்டர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தங்கள் அணியின் வெற்றியைக் கொண்டாடினர்.ANI
இந்த ஆட்டத்தில் 33 மற்றும் 4 ரன்கள் எடுத்த ஸ்மித், சொந்த மண்ணில் 5,000 டெஸ்ட் ரன்களை கடந்தார்.ANI
162 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 3 ஆரம்ப விக்கெட்டுகளை இழந்ததாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் பியூ வெப்ஸ்டர் நிலைத்து நின்று இலக்கை எட்டி வெற்றியை பெற்றனர்.ANI
இந்த வெற்றியின் மூலம் 10 வருட காத்திருப்புக்குப் பிறகு, ஆஸ்திரேலியா முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியைக் கைப்பற்றியுள்ளது.