

புதுடில்லி, ஜன. 22 - குழந்தைகள் பிறப்பு விகிதத்தை விரைவாக குறைக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சாத்தியம் பற்றி பிரதமர் திருமதி இந்திரா காந்தி இன்று குறிப்பாக கூறினார். இதுகுறித்து முடிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தயங்கக்கூடாது என்று டாக்டர்கள் சங்கத்தின் 31-வது மகாநாட்டைத் துவக்கிவைத்து பேசுகையில் திருமதி காந்தி கூறினார்.
நாட்டிலுள்ள பொதுமக்களின் உரிமைகளை முன்னிட்டு சில தனிப்பட்ட நபர்களின் உரிமைகளை நிறுத்திவைப்பது அவசியமாகிறது என்று பிரதமர் பிரபல டாக்டர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
விரும்பத்தகுந்த அளவிலானதாக குழந்தை பிறப்பு விகிதத்தை குறைக்க, அரசு புதிய முறையொன்றை அறிவிக்கும் என்று பிரதமருக்கு பின்னர் பேசிய சுகாதார மந்திரி டாக்டர் கரண்சிங் அறிவித்தார். குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்பவருக்கான சலுகைகள் அதிகரிப்பு மற்றும் செய்து கொள்வதற்கு சலுகைகள் குறைப்பு பற்றி ஒரு திட்டத்தை உருவாக்குவது சம்பந்தமாக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.