புது டில்லி, ஜூன். 21 - தி.மு.க.வில் உள்ள அனேக முக்கிய உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் வரி ஏய்ப்பு செய்ததையும், கருப்புப் பணம் குவித்ததையும் சர்க்கார் கண்டுபிடித்துள்ளது. அவர்களது பல வீடுகளிலும், பாங்குகளின் கிளைகளிலும் பல தடவை சோதனைகளை நடத்தியதை தொடர்ந்து இவற்றை சர்க்கார் கண்டுபிடித்திருக்கிறது.
பெரும் எண்ணிக்கையில் சந்தேகத்துக்கிடமான தஸ்தாவேஜிகளும், கணிசமான அளவுக்கு கணக்கில் வராத முதலீடுகளும், சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமான செய்திக் குறிப்பு கூறியது.
கறுப்புப்பணத்தை கண்டுபிடிப்பதற்கும் வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் அரசாங்கம் நாடெங்கிலும் நடத்திவரும் இயக்கத்தையொட்டி, தி.மு.கழகக் கட்சியின் அனேக முக்கிய உறுப்பினர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் பெருமளவில் கணக்குக் காட்டப்தடாத சொத்துக்களைத் திரட்டிக் கொண்டது. மிகுந்த அளவு வருமான வரி ஏய்ப்புச் செய்தது பற்றிய குற்றச்சாட்டுக்களை வருமான வரி இலாகாவின் புலனாய்வுப் பிரிவு நன்கு ஆராய்ந்து வந்திருக்கிறது.
இந்தப் புலன் விசாரணையின்போது கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் சென்னையிலுள்ள வருமானவரி இலாகாவின் துப்பபறியும் பிரிவு, அவர்களில் பலருடைய வீடுகளிலும் அவர்கள் கணக்கு வைத்திருந்த சில பாங்குகளின் கிளைகளிலும் கடந்த மூன்று மாத காலத்தில் திடீர்ச் சோதனைகளையும் நடத்தியுள்ளது. இந்தச் சோதனைகளின் பலனாக, குற்றச்சாட்டுகளுக்கு உடந்தையான தஸ்தாவேஜூகளின் பெரும் தொகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மிகக் கணிசமாகப் பெருமளவில் கணக்குக் காட்டப்படாத முதலீடுகள் அல்லது சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ரூ. 32 லட்சம் கரன்சி மாற்றம்
இந்தத் திடீர்ச் சோதனைகளில் ஒன்றின்போது, சென்னையிலுள்ள பாங்கு ஒன்றின் கிளையிலிருந்து சில தஸ்தாவேஜூகளை அதிகாரிகள் கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட பாங்கு அதிகாரிகளிடமிருந்தும், சம்பந்தப்பட்ட இதர நபர்களிடமிருந்தும் வாக்குமூலங்களையும் அவர்கள் பெற்றார்கள். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். கருணாநிதின் உத்தரவுப்படி, 1974 ஜூலை மாதத்திலும், அக்டோபர் மாதத்திலும், 1975 ஜூன் மாதத்திலும் மொத்தம் 32 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் மதிப்புக் கொண்ட கரன்சி நோட்டுக்கள், அதைவிடக் குறைவான மதிப்புக் கொண்ட கரன்சி நோட்டுக்களாக இந்த பாங்கில் மாற்றப்பட்டுள்ளதாக இந்த தஸ்தாவேஜூகளும் வாக்குமூலங்களும் காட்டுகின்றன.
உயர் மதிப்புக் கொண்ட கரன்சி நோட்டுக்களை கருணாநிதியின் அந்தரங்கக் காரியதரிசி இந்தப் பாங்குக்கு எடுத்துச் சென்றதாகவும், இந்தக் கரன்சி நோட்டுக்களை குறைவான மதிப்பு நோட்டுகளாக மாற்றுவதற்கு ஒரு விசேஷ ஏற்பாட்டின் மூலம் இந்த பாங்கின் அதிகாரிகள் மிகை நேரம் வேலை பார்த்ததாகவும் வருமானவரி இலாகாவுக்குக் கிடைத்துள்ள சான்று காட்டுகிறது. இந்தப் பண நோட்டுக்களை மாற்றிக் கொள்வதில் காணப்பட்ட வேகம், உயர் மதிப்புக் கரன்சி நோட்டு செல்லாததாகி விடும் என்ற திடீர் அச்சத்தின் காரணமாக ஏற்பட்டது என்பதை ஊகிக்கலாம். தி.மு.க. கட்சி நிதியின் ஒரு பகுதியாகவிருக்கும் இப்பெரும் தொகையான 32.9 லட்ச ரூபாய்க்கான சாத்தியக்கூறு ஆராயப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்ட காலத்தில் தி.மு.க. கட்சியின் கணக்குப் புத்தகங்களில் காட்டப்பட்டிருக்கும் ரொக்கமீதிகள், பாங்கின் மூலம் மாற்றப்பட்ட பெரும் தொகையை விட மிகவும் குறைவாகவே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், தன்னிடம் சுமார் 40 லட்ச ரூபாய் ரொக்கம் வைத்திருப்பதாக கருணாநிதி தனது சட்ட ஆலோசகர்களில் ஒருவரிடம் குறிப்பிட்டதாகவும், இந்த ரொக்கத்தை எந்த வகையில் பாதுகாப்பாக முதலீடு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ முடியும் என்று அவரது ஆலோசனையை கேட்டதாகவும் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கருணாநிதி உத்திரவுகளின்படி பாங்கின் மூலம் மாற்றப்பட்ட 32.9 லட்சம் ரூபாய் ரொக்கம் கிடைத்ததற்கான வழி முற்றிலும் விளக்கப்படாமலேயே உள்ளது. வரி மதிப்பீடுகள் செய்வதற்காக கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளபடி, அவரது சொந்த வருமானமும் நிதி வளங்களும் இந்த ரொக்கத்திற்குக் கணக்கிட மிகக் குறைவானவையே ஆகும்.
முதலீடுகள்
கருணாநிதி, 1967-ல் அமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து, அவரது சொந்தப் பெயரிலும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் மிகச் சொற்பமாக தனிப்பட்ட நிதிவளங்கள் கொண்டிருக்கும் மற்ற உறவினர்கள் பெயரிலும் நிலையான சொத்துக்கள் வாங்குவதிலும் அவற்றைத் திருத்தி அமைப்பதிலும் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோபாலபுரத்தில் கருணாநிதி வசிக்கும் வீடு, கார்ப்பொரேஷன் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதனால் அங்கீகரிக்கப்பட்டுள்ள திட்ட நகல்களுக்கும் பொருத்தமில்லாத வகையில் 1972ம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே சென்னை கோபாலபுரத்தில் உள்ள இன்னொரு வீடு, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கருணாநிதியால் அவரது சொந்தப் பெயரில் 1968ம் ஆண்டு வாங்கப்பட்டு பின்னர் அவரது மகன் முத்துவுக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முத்து, 1971ம் ஆண்டு வரையில் கருணாநிதியையே உண்மையில் சார்ந்திருந்தவர். இந்த இரண்டு வீடுகளை திருத்தியமைப்பதற்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது பற்றிய உண்மைகளும் அதற்கான வழிகளும் வரி நிர்வாகத்திடம் வெளிப்படுத்தப்படவில்லை.
இதைப் போன்றே கோபாலபுரத்தில் மற்றொரு வீட்டை திருத்தியமைப்பதற்காக சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த வீடு கருணாநிதியின் தனக்குச் சொந்தமாக மருமகனான செல்வத்தின் பெயரில் 1970ல் வாங்கப்பட்டது. செல்வம் 1971ம் ஆண்டு வரையில் தனக்குச் சொந்த எந்த வருமான வழியையும் கொண்டிருக்கவில்லை. 1971ல் 'அஞ்சுகம் பிக்சர்ஸ்' நிறுவனத்தில் அவர் பங்குதாரராக ஆனார். அந்நிறுவனத்திலிருந்து அவருக்குக் கிடைத்த வருவாய். மேலே சொல்லப்பட்ட வீட்டுச் சொத்தில் முதலீடு செய்ததாக கணக்குக் காட்டப் போதுமானதல்ல. ...
Summary
22.6.1976: Large amounts of black money discovered with DMK leaders.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் புதிய வருமான வரி சட்டம் குறித்த விழிப்புணா்வு

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள்?

2026-ல் பணி ஓய்வுபெறுபவரா? ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன்பு அறிய வேண்டியது!

வருமான வரிக் கணக்கு ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies





