அரிசி கடத்தல்காரர்களால் ஏற்படும் தொல்லையை ஒடுக்கும்பொருட்டு நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரிகள் பெரும்படையாகத் திரண்டு சென்று சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே ரயில் வண்டிகளை மடக்கி, சுற்றிவளைத்து திடீரென்று சோதனைகளை நடத்தினார்.
கூடுவாஞ்சேரி - வண்டலூர் ரயில் நிலையங்கள் இடையே இவர்கள் கொளுத்தும் வெயிலில் ரயில் பாதைக்கு இரு பக்கத்திலும் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு முதல் ரயில் வண்டிக்காகக் காத்திருந்தனர்.
உயர் அதிகாரியான ரயில்வே தலைமை கமர்ஷியல் சூபரின்டெண்ட் சி.வி.பி. மேனன் இச்சோதனைக் கோஷ்டிக்குத் தலைமை வதித்து, ரயில் வண்டி வந்ததும், அதைக் கொடி காட்டி நிறுத்துவதற்குத் தயாராகக் காத்திருந்தார்.
ரயில் தண்டவாளத்தில் நான்கு சிவப்புத் தட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. அப்படி ஒருவேளை ரயில் என்ஜின் டிரைவர் கவனிக்காமல் போகும்போது என்ஜின் சக்கரங்கள் இந்தத் தகடுகள்மீது செல்லும்போது இவை வெடிச்சத்தத்தைக் கிளப்பி, என்ஜின் டிரைவரை ரயிலை நிறுத்தும்படி உஷார்ப்படுத்தும். அதற்காகவே இவை பொருத்தப்பட்டிருந்தன.
ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 50 அதிகாரிகள் 66 டிக்கெட் சோதனை அதிகாரிகள் மற்றும் ஏராளமான ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள் ஆகியோர் இவ்விதம் சோதனைக்குக் காத்திருந்தனர்.
ஆனால் சோதனைப்படையினர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் வண்டி துரதிர்ஷ்டவசமாக 100 நிமிஷ நேரம் தாமதமாக பிற்பகல் 2-10 க்குத்தான் அந்த இடத்துக்கு வந்தது.
நீண்ட நேரம் இப்படையினர் அதுவும் கடும் வெயிலில் காத்திருந்தனர் என்பதால் சில இளைஞர்கள் எப்படியோ விஷயத்தைப் புரிந்து கொண்டு சத்தம் போடாமல் நழுவி சைக்கிள் மூலம் சென்று தங்கள் தலைவர்களுக்குத் தெரிவித்துவிட்டனர் போலும்; எனவே மேற்படி ரயில் வண்டி வந்தபோது சோதனைப் பகுதிக்கு ஒரு பர்லாங் முன்னரே யாரோ அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திவிட்டனர்.
ரயில் வண்டி கிறீச்சிட்டு நின்றதும் ரயில் பெட்டிகளிலிருந்து இரு புறங்களிலும் பொத பொதவென்று அரிசி மூட்டைகள் வெளியே வந்து விழுந்தன. அரிசி கடத்தல்காரர்களில் சிலர் அவசர அவசரமாகக் கீழே இறங்கி ஓட முற்பட்டனர்.
இத்தனை நேரம் இவர்களைப் பிடிப்பதற்கென்றே காத்திருந்த சோதனைப் படையினர் சும்மா விடுவார்களா? உடனே பாய்ந்து செயல்படத் துவங்கினர். கடத்தல்காரர்களில் சிலர் அரிசி மூட்டைகளை அருகிலிருந்த புதர்களுக்குள் தள்ளினர்.
ஆனால் 6 வயதான ராணி, 10 மாதமான ஆர்யபட்டா ஆகிய இரு மோப்ப நாய்களும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அரிசி கடத்தல்காரங்களின் திட்டத்தைக் குலைத்தன. இந்த இரு நாய்களும் அருகிலுள்ள கிளியம் பாக்கம் கிராமம் வரை ஓடிச் சென்று அரிசி மூட்டைகளையும், அரிசி கடத்தல்காரர்களையும் பிடித்துக்கொடுத்தன. ...
5 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்ததாக ஒரு பெண் உட்பட 4 நபர்கள் கைது
சென்னை, மார்ச். 9 - ஐந்து ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக பெண் உட்பட நான்கு நபர்களை நகர போலீசார் கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட நால்வரில் கே. கே. புருஷோத்தமன் (27), என். கோபால் (30), சசிகுமார் (23) ஆகிய மூவரும் சென்னையில் மண்ணடி பகுதியில் உள்ள ஜீல்ஸ் தெருவும் செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெருவும் சந்திக்குமிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். இந்தக் கள்ள நோட்டுக் கும்பலின் சூத்ரதாரி என்று கூறப்படும் பாபு என்கிற விஜயனின் மனைவி சாரதா (23) திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார்.
அசல் நோட்டுக்களைப் போலவே அச்சடிக்கப்பட்ட ரூ. 5,600 மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும், ஒரு பகுதி பின்புறம் அச்சடிக்கப்பட்டு விடப்பட்ட அச்சடிக்கப்படாமல் அரைகுறையாக சில நோட்டுகளையும் போலீசார் போலீஸ் கைப்பற்றியுள்ளனர். கமிஷனர் என். கிருஷ்ணசாமி இன்று நிருபர்களிடம் இந்த நோட்டுக்களைக் காண்பித்தார். ...
Summary
10.3.1976: Officials raid train carriages near Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு



