கண்ட்பாரா, (மகாராஷ்டிரம்) மே. 16- எல்லா நாடுகளுடனும் நட்புறவையும் சமாதானத்தையும் கைக் கொண்டிருப்பதே இந்தியாவின் கொள்கையாகும் என்று பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் வலியுறுத்தினார்.
இங்கு ஆதிவாசிகளின் கூட்டத்தில் பிரதமர் பேசினார். விடுதலையடைந்ததிலிருந்து மிகக் குறுகிய காலத்துக்குள்ளாக நாடு பல தடவை வெளி ஆக்ரமிப்பை எதிர்ப்படநேர்ந்தது. இதன் விளைவாக தீரமிக்க ராணுவ ஜவான்கள் உயிரிழக்க நேர்ந்ததுடன் எல்லா பொது சேம நலத் திட்டங்களும் பாதிக்கப்பட்டன என்றார் பிரதமர்.
எனவே ஆக்ரமிப்புக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தி வரும் அதே நேரத்தில் இந்தியா எல்லா நாடுகளுடனும் சமாதான நட்புறவுக் கொள்கையையே எப்போதும் பின்பற்றி வந்துள்ளது. பிறநாடு ஒன்று நம்மிடம் விரோதம் காட்டினாலும் சரி, ஆக்கிரமிப்பு செய்தால் தகுந்த பதிலடி கொடுப்பதும், மற்றபடி முடிந்த வரை நட்புறவைப் பராமரிக்க முயற்சிப்பதும் நமது கொள்கையாகும் என்று இந்திரா காந்தி கூறினார்.
போர் ஏற்படும் போது பெரும் சுமை ஏழை மக்கள் மீதும், அடித்தள மக்கள் மீதும் தான் விழுகிறது என்றும் பிரதமர் சொன்னார்.
பேரணி எல்லை தாண்டாமல் தடுக்க வங்கதேச துப்பாக்கி படைக்கு உத்தரவு
மால்டா, மே. 16 - மௌலானா பாஷானி பேரணியை சேர்ந்த தொண்டர்கள் யாரும் எல்லையை தாண்டி விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு வங்கதேச துப்பாக்கிப் படையினர் உஷார்ப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
வங்கதேச எல்லையில் உள்ள மால்டா, மூர்ஷிதாபாத் ஜில்லாக்களில் உள்ள தனது துப்பாக்கிப் படையினருக்கு வங்கதேச அரசாங்கம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இந்திய எல்லைப் பந்தோபஸ்து படையின் தலைமை அதிகாரியான அஷ்வனிகுமாருக்கு வங்கதேசத்தின் மேற்கண்ட முடிவு இன்று தெரிவிக்கப்பட்டது.
எல்லை பந்தோபஸ்து படையின் உயர் அதிகாரிகளுடன் மால்டாவில் உள்ள ஒரு எல்லைக் காவல் நிலையத்துக்கு அவர் இன்று சென்றிருந்தார். அங்கு வங்கதேசத் துப்பாக்கிப் படை அதிகாரி ஒருவர் அத்தகவலை அஷ்வினிகுமாரிடம் கூறினார்.
இதற்கிடையில் மால்டா, மூர்ஷிதாபாத் ஜில்லாக்களின் எல்லை முழுவதிலும் இந்திய எல்லை பந்தோபஸ்து படையினர் மிகவும் உஷாராக இருக்கிறார்கள்.
பராக்கா அணைக்குக் கூடுதலான போலீஸ் மத்திய ரிசர்வ் போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருக்கிறது. யாரும் அங்கு வந்துவிடாமல் தடுக்க போதிய முன்னேற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. ...
Summary
Even if another nation displays hostility, it is India's policy to preserve friendship to the fullest extent possible. — Indira Gandhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு

1.5.1976: மொழித் திணிப்புக்கு பிரதமர் இந்திரா காந்தி எதிர்ப்பு!

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


