9.11.1976: சர்க்காரியா கமிஷன் முன்பு 6 ஊழல் புகார்கள் பற்றி டில்லியில் 15-ந்தேதி வக்கீல்கள் வாதிப்பர்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

9.11.1976 - Dinamani
சென்னை, நவ. 8- சென்னையில் இரு புகார்கள் பற்றிய விசாரணையை முடித்த சர்க்காரியா கமிஷன் இம்மாதம் 15,16 தேதிகளில் டில்லியில் கூடும். அப்போது 6 ஊழல் புகார்கள் பற்றி வக்கீல்கள் வாதிப்பர்.
அந்த ஊழல் புகார்கள் பற்றிய விவரம் வருமாறு:-
(1) கருணாநிதி வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்த போது அவருக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட டிராக்டரை, கோவையில் ஒரு பண்ணையில் உபயோகப்படுத்தியதாக கூறப்படும் புகார்.
(2) தமிழ்நாடு குடிநீர்- வடிகால் வாரிய முன்னாள் தலைவரான எஸ். கந்தப்பனின் மாமனாரான ரங்கசாமி கவுண்டருக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கார்ப்பரேஷனிலிருந்து ரூ.1.7 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கச் செய்ததில் காட்டப்பட்டதாக கூறப்படும் "தனி சலுகை" பற்றிய புகார்.
(3) குளோப் தியேட்டர் உரிமையாளர், முதல்வருக்கு ரூ. 30 ஆயிரம் அளித்ததாகக் கூறப்படும் புகார்
(4) " பிராட்வே டைம்ஸ்" என்ற பத்திரிகை ஆசிரியருக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் விசேஷ சலுகைறிய புகார்.
(5) ஏ.எல்: சீனிவாசனுக்கு சாராயத் தொழில் நடத்த லைசென்ஸ் வழங்கிய விவகாரம் பற்றிய புகார்.
(6) திருச்சி ஜில்லாவில் பண்ணையாட்களை வெளியேற்றிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் ஆற்றியதாகக் கூறப்படும் பங்கு பற்றி புகார்.
இன்று விசாரணை முடித்த பிறகு நீதிபதி சர்க்காரியாவை பத்திரிகை நிருபர்கள் சந்தித்த போது, "மிக விரிவான "முறையிலும், "நடந்தது நடந்தபடியும்" பத்திரிகைகளில் பிரசுரம் செய்ததற்காக சென்னை பத்திரிகைகளுக்கு அவர் மிகவும் பாராட்டு தெரிவித்தார்.
Summary
Having concluded its inquiry into two complaints in Chennai, the Sarkaria Commission will meet in Delhi on the 15th and 16th of this month. At that time, lawyers will present arguments regarding six allegations of corruption.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


