9.10.1976: த.நா. மாஜி மந்திரிகள் மீதான புகார்கள் - சிபிஐ விசாரணை பூர்த்தி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

9.10.1976 - Dinamani
புதுடில்லி, அக். 8 - தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர்கள் சிலர்மீது கூறப்பட்ட ஊழல் புகார்கள், வரி ஏய்ப்புப் புகார்கள் பற்றிய தன்னுடைய விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) முடித்துக் கொண்டுவிட்டதாக, மத்திய உள்துறை துணை அமைச்சர் ஓம்மேத்தா நிருபர்களிடம் கூறினார். இந்தப் புகார்களை மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு விட்டிருந்தது.
இந்தப் புகார்கள் சம்பந்தமாக குற்றப் பத்திரிகை, சி.பி.ஐ.யினால் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று ஓம்மேத்தா கூறினார்.
இந்தப் புகார்கள் சர்க்காரியா கமிஷனின் விசாரணைக்கு விடப்படாதவை.
தமிழ்நாட்டில் நெல், அரிசி நடமாட்ட கட்டுப்பாடு ரத்து
சென்னை, அக். 8 - கேரளா நீங்கலாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுவை மாநிலத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய தென் உணவு மண்டலம் அமைக்க மத்திய சர்க்கார் முடிவு செய்து அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு கிடையே தற்போது அமலில் உள்ள அரிசி, நெல் நடமாட்ட கட்டுப்பாடு, அரசு குறிப்பிட்டு அறிவித்துள்ள மாநிலத்தின் சில எல்லை ஓரப்பகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும், இம்மாதம் 15-ம் தேதியிலிருந்து நீங்கும்.
தமிழக கவர்னரின் ஆலோசகர் ஆர்.வி.சுப்பிரமணியனும், மாநில அரசின் உணவுத்துறை தனிச் செயலாளர் கே. திரவியமும் இன்று கோட்டையில் நிருபர்கள் கூட்டத்தில் இந்தத் தகவலை அறிவித்தார்கள்.
'நெல் உற்பத்தியாளர்கள், வாங்கிச் சாப்பிடும் மக்கள் ஆகிய சகல தரப்பினரின் நலனைக் கருதி, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. சமுதாயத்தின் பொதுநலன், மக்கள் நலன் கருதி இந்த முடிவு வெற்றிகரமாக அமல் நடத்தப்பட உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பொது மக்கள் ஆகிய சகல தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று ஆலோசகர் ஆர்.வி. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
இது சம்பந்தமாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுவதாவது:-
மாநிலங்களுக்கிடை அரிசி நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு இராது
கேரளா நீங்கலாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென் உணவு மண்டலம் அமைத்து இம்மாதம் 6ம் தேதி அன்று மத்திய அரசு உத்திரவு பிறப்பித்துள்ளது. அமைக்கப்பட்டுள்ள இந்த தென் உணவு மண்டலத்தில் அரிசி நடமாட்டத்திற்கு (ஒரு மாநிலத்திலிருந்து அரிசி இன்னெரு மாநிலத்திற்கு செல்ல) எவ்விதத் தடை, அல்லது கட்டுப்பாடும் இருக்காது. இந்த தென் அரிசி மண்டலத்தில் தாராளமாக அரிசி நடமாட்டம் அனுமதிக்கப்படும். ...
Summary
9.10.1976: Complaints against former Tamil Nadu ministers – CBI investigation completed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


