கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

15.9.1976: யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது: கோவில்பட்டியில் பிரதமர் இந்திரா காந்தி உறுதிமொழி

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

15.9.1976 - Dinamani

Published On :

கோவில்பட்டி: எந்த மொழியும் யார் மீதும் கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது என்று தமிழ் நாட்டு மக்களுக்கு பிரதம மந்திரி இந்திரா காந்தி உறுதி கூறினார்.

வறட்சி நிவாரணப் பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் இங்கு கூட்டமொன்றில் பேசினார். பிராந்திய மொழிகளை சகல விதத்திலும் ஊக்குலிப்பதே மத்திய சர்க்காரின் கொள்கை என்று பிரதம மந்திரி குறிப்பிட்டார்.

அமைதி நிலவினால்தான் உற்பத்தியைப் பெருக்கி, வறுமையை அகற்ற முடியும். ஒரே நாளில் வறுமையை ஒழித்து விட முடியாது என்பதை நாம் அறிவோம். வறுமை என்பது பழைய சட்டையை அல்லது புடவையை மாற்றுவது போல் அல்ல. வறுமை என்பது உணவு பற்றாக்குறை, உற்பத்தி பற்றாக்குறை, வேலைவாய்ப்பு, தங்கும் வசதி போதுமான அளவு இல்லாமை ஆகியவையாகும். இத்தகைய அம்சங்கள் வறுமைக்கு வழி வகுக்கின்றன. ஆகவே மக்களுக்கு உதவ வேண்டுமானால் உற்பத்தியை பெருக்க வேண்டும். உணவு தானிய பற்றாக்குறையை நீக்க வேண்டும். தொழிற்சாலை, இதர வகை உற்பத்தி அனைத்தும் அதிகரிக்கப்பட வேண்டும். உற்பத்தியான பண்டங்கள் நியாயமான முறையில் சகல தரப்பு மக்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டும். உற்பத்தி பெருக நாட்டில் அமைதி நிலவ வேண்டும். மக்கள் ஒத்துழைக்க வேண்டும். வன்முறை கிளர்ச்சிகள், வன்முறை சம்பவங்கள் எதுவும் கூடாது என்று இந்திரா காந்தி மேலும் கூறினார்.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நிலவியபோது நிர்வாகத் திறமைக்கு இம்மாநிலம் எடுத்துக்காட்டாக விளங்கியது என்று அவர் குறிப்பிட்டார். ...

த.நா. வறட்சி பகுதிகளில் பிரதமர் சுற்றுப்பயணம்

நாகர்கோவில், செப். 14 - தமிழ் நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிவாரணத்துக்கு உதவி அளிக்க மத்திய அரசு தன்னால் இயன்றதையெல்லாம் செய்யும் என்று கூறினார்.

மாநிலத்தில வறட்சிப் பகுதிகளில் இரண்டு நாள் சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், இன்று நாகர்கோவிலிலும், பாளையங்கோட்டையிலும், பொதுக் கூட்டங்களில் பேசினார்.

இந்தக் கூட்டங்களில் பேசுகையில், பிரிவினைப் போக்கு ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்றும், பலம் வாய்ந்த மத்திய அரசு தேவை என்றும் கூறினார்.

என்னநேர்ந்தாலும் சரி, நாட்டில் பிரிவினை எண்ணங்களைப் பரப்புவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி இன்று இங்கு கூறினார்.

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட வறட்சியால் பகுதிகளில் இன்று இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட பிரதம மந்திரி, இங்குள்ள சேது லட்சுமி பாய் உயர் நிலைப் பள்ளி காம்பவுண்டில் ஒரு பெரும் பொதுக் கூட்டத்தில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இத்தகைய பிரசாரத்தில் தாங்கள் கலந்துகொள்ளவில்லை என்று சில எதிர்க்கட்சிகள் மறுத்த போதிலும், இந்தப் பிரசாரம் இன்னமும் நடப்பதாகத் தகவல் உள்ளது என்றார். மாநில சுயாட்சிக் கோஷத்தின் பேரால் இந்தப் பிரசாரம் நடப்பதைக் காணலாம் என்று கூறினார்.

"என்ன நேர்ந்தாலும் சரி, என்னிடமுள்ள சக்தியையெல்லாம் கொண்டு பிரிவினைப் போக்கு சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறேன்" என்று தம்முடைய குரலை உயர்த்தி பிரதமர் சொன்னார். ...

Summary

No language will be imposed on anyone: Prime Minister Indira Gandhi assures in Kovilpatti.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.