6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

22.9.1976: கருணாநிதிக்கு சர்க்காரியா கமிஷன் நோட்டீஸ்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

22.9.1976 - Dinamani

Published On :

சென்னை, செப். 21- சர்க்காரியா கமிஷன் முன்பு சாட்சியமளிக்கும் பொன்னி கம்பெனி பாகஸ்தர் வி. ராஜகோபாலன், அந்த கமிஷன் முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தாம் குறுக்கு விசாரணை செய்யப்படலாம் என்றும் எனவே, தாம் யாரையும் சாட்சிக்கூண்டுக்கு அழைத்து அவர்களை வாய்மூலம் விசாரணை செய்வதற்கும் அவர்களைக் குறுக்கு விசாரணை செய்வதற்கும் தமக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தும் உத்ரவைக் கமிஷன் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுமீது கமிஷன் நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் ஆகிய இருவரும் நேரிலோ அல்லது அவர்களது வக்கீல்கள் மூலமோ ஆஜராவதற்கும் அல்லது அவர்கள் இந்த மனுமீது தங்கள் தரப்பை எடுத்துரைப்பதற்கும் வாய்ப்பு அளிப்பதற்காக வேண்டி அவர்கள் இருவருக்கும் கமிஷன் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகோபால் மனுமீது உத்திரவு பிறப்பிக்கப்படும் என்பதை பொறுத்து ராஜகோபால் சாட்சியம் துவங்கியுள்ளது. 21-ந்தேதி யன்றும் ராஜகோபால் சாட்சியம் நீடிக்கலாம். பிரதிவாதிகள் 21-ந் தேதியோ அல்லது அதற்கு மறுநாளே அவரை குறுக்கு விசாரணை செய்யும் உரிமையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை கருணாநிதிக்கும் அன்பில் தர்மலிங்கத்துக்கும் தெரிவிக்குமாறும் கமிஷன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

ராஜகோபால் சாட்சியம் 21-ந் தேதி முடிவடைந்தால் அடுத்த சாட்சிகள் எஸ். ஏ. ராமச்சந்திரன், ஆர்.எச். காப்டன் கே.என்.ஏ. நரசிம்மன் ஆகியோர் சாட்சியம் பதிவு செய்யப்படும் என்று பிரதிவாதிகளுக்குக் கமிஷன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

குறுக்கு விசாரணை செய்யும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதிவாதிகளைக் கமிஷன் இந்த உத்தரவில் கேட்டுக்கொண்டுள்ளது. கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் ஆகியோரிடம் சாத்யமானால் நேரில் இந்த நோட்டீஸைத் தருமாறும், அல்லது அதிகாரப்பூர்வ ஏஜண்டு மூலம் கொடுக்குமாறும் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்குமாறும் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசில் இலாகா நிறுவ யோசனை

கோயமுத்தூர், செப். 21- தமிழக அரசு "ஊழியர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த இலாகா" ஒன்று அமைப்பது பற்றி யோசித்து வருகிறது.

கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகள், கெஜட் பதிவு பெறாத அதிகாரிகள் என்ற வித்தியாசத்தை நீக்கிவிடும் யோசனையும் அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்தத் தகவல்களை அரசின் இரண்டாவது த.நா. செயலர் சி. வி. பணிக்கர் இன்று என்.ஜி. ஓ மகாநாட்டின் இறுதிக்கூட்டத்தில் தெரிவித்தார்.

உத்தேச ஊழியர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த இலாகா, நிர்வாகத் திறமையைப் பெருக்குவதோடு மாநில அரசு ஊழியரின் வேலை நிலைமையில் அபிவிருத்தி காணவும் முயற்சிக்கும் என்று பணிக்கர் சொன்னார். ...

Summary

22.9.1976: Sarkaria Commission notice to Karunanidhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.