மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அஜீரணக் குறைபாட்டால் உண்டாகும் வயிற்று வலியைப் போக்க உதவும் கசாயம்

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி, அடிவயிறு பிடித்தம் ஆகியவற்றைப் போக்க இந்த அற்புத கசாயத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

News image
Updated On :6 மே 2020, 11:17 am

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி, அடிவயிறு பிடித்தம் ஆகியவற்றைப் போக்க இந்த அற்புத கசாயத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

தேவையான பொருட்கள்

ஓமம்                -   10 கிராம்

வசம்பு              -  5  கிராம்

கோஷ்டம்        -  5  கிராம்

மஞ்சள் தூள்        -    இரண்டு சிட்டிகை
                                   
செய்முறை

முதலில் ஓமம், வசம்பு மற்றும் கோஷ்டம் ஆகியவற்றைத் தட்டி எடுத்துக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கருக்கிக் கொள்ளவும். அதில் 250 மி.லி தண்ணீர் ஊற்றி அதில்  மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதிக்க வைத்து 100 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி   வடிகட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம்  அஜீரணம் காரணமாக உண்டாகும் வயிற்று வலியைப் போக்க உதவும் அருமருந்தாகும். இந்தக் கசாயத்தைத் தயார் செய்து ஆற வைத்துக் கொண்டு காலை , மாலை என இரு வேளையும் தலா  50 மி.லி அளவாகக் குடித்து  வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.