லட்சத்தில் 11.9 ஆண்களுக்கு இரைப்பை புற்றுநோய்!
சென்னையில் ஒரு லட்சத்தில் 11.9 ஆண்களுக்கு இரைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவைச்


சென்னையில் ஒரு லட்சத்தில் 11.9 ஆண்களுக்கு இரைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறையின் முன்னாள் இயக்குநர் எஸ்.எம்.சந்திரமோகன் கூறினார்.
ஈசோ இந்தியா அமைப்பின் சார்பில் இரைப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சந்திரமோகன் பேசியது:
ஆசிய நாடுகளில் இரைப்பை புற்றுநோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஜப்பான், கொரிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரைப்பை புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் இரைப்பை புற்றுநோயில் மிசோரம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள ஒரு லட்சம் பேரில் 64.2 சதவீதம் பேர் இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னையில் ஒரு லட்சத்தில் 11.9 ஆண்களுக்கும், 5.9 பெண்களுக்கும் இரைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களில் சிகிச்சை பெற்று 5 ஆண்டுகளுக்கும் மேல் உயிரோடு இருப்பவர்கள் வெறும் 10 சதவீதம் பேர்தான்.
வயிற்றில் ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால் அதனை அஜீரணக் கோளாறு என்றோ, அல்சர் என்றோ நினைத்துக் கொண்டு மருத்துவரை அணுகுவதில்லை. இதனால் நோய் முற்றிய நிலையிலேயே நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்க வழக்கம், மது, புகை உள்ளிட்டவையே இரைப்பை புற்று நோய்க்கு முக்கியக் காரணமாகும். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து நோயாளியின் வாழ்க்கை தரத்தை அதிகரிக்க முடியும் என்றார் அவர். இதையொட்டி, நடத்தப்பட்ட போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்களும் பதில் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...