தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

நாள்பட்ட விக்கல் நிற்க வேண்டுமா? இதை முயற்சித்துப் பாருங்கள்!

வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச் சத்துக்களான பொட்டாசியம், இரும்புச் சத்து

News image
Updated On :17 டிசம்பர் 2018, 10:58 am IST

சத்துக்கள் : வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச் சத்துக்களான பொட்டாசியம், இரும்புச் சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு : அரசாணிக்காய் (100 கிராம்) தோலுடன் நன்றாக துருவி அதனுடன் புடலங்காய் (100 கிராம்), முருங்கை விதைப்  பருப்பு (10) அளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து வைத்துக் கொண்டு நாள் முழுவதும் கோஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். முடிந்தவுடன் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும்.

மதியம் வேளை உணவில் அரசாணிக்காய் மற்றும் புடலங்காயை தோலுடன் துருவி நீராவியில்  வேகவைத்து அதனுடன் தேங்காய் நிறையத் துருவிப் போட்டு பொரியலாக செய்து சாப்பிட்டு வரவும்.

கடுகை (1 ஸ்பூன்) எடுத்து  இரவு முழுவதும் ஊற வைத்து, அந்த தண்ணீரை அதிகாலையில் குடித்து வந்தால் நாள்பட்ட விக்கல் குணமாகும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.